என்ன  ஒரு மாய நிலை

என்னை நானே தேடிக்கொண்டிருக்கிறேன்

என்னை சுற்றி உள்ளவர்களோ ஏளனமாய் சிரிக்கிறார்கள்

பைத்தியம் என்கிறார்கள்

நானோ கொஞ்சம் கொஞ்சமாய் இருளில் மூழ்கி கொண்டிருக்கிறேன்

இவர்களின் கேலி பேச்சை கேட்கும்பொழுது தூக்கு கயிறு கூட பாரமாய் தெரியவில்லை.

வாழ்க்கையை முடித்து கொள்ளலாமா

விடியல் பிறக்குமா

காலத்தின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.